தேசிய விருது நாயகர்களுடன் இணைந்த விக்ரம் பிரபு!


தேசிய விருது நாயகர்களுடன் இணைந்த விக்ரம் பிரபு!

‘இது என்ன மாயம்’ படத்திற்கு பிறகு ‘வாகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இவருடன் ரன்யா ராவ், துளசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர். குமாரவேல் இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து ‘வீர சிவாஜி’  படத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு. இப்படத்தில் அஜித் மனைவி ஷாலினியின் தங்கையான நடிகை ஷாம்லி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் ரோபா சங்கர், ஜான்விஜய், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை ஓரிரு நாட்களுக்கு முன்பு துவங்கியது. தற்போது இப்படத்திற்கு கலை இயக்குனராக லால்குடி இளையராஜாவும் மற்றும் நடனத்திற்காக தினேஷ் அவர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தேசிய விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு இமான் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்ய திலீப் சுபுராயன் சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்கிறார். தகராறு படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இப்படத்தை இயக்க ‘ரோமியோ ஜூலியட்’ நந்தகோபால் தயாரிக்கிறார்.