விக்ரம்-சூர்யா-தனுஷை வறுத்தெடுக்கும் வலைத்தளவாசிகள்..!


விக்ரம்-சூர்யா-தனுஷை வறுத்தெடுக்கும் வலைத்தளவாசிகள்..!

நேற்று முன்தினம் (மே 16) அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இம்முறையாவது வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.

ஆனால் லட்சணக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்கள் வாக்களிக்கவில்லை.

அவர்கள் ஓட்டளிக்க முடியாமல் போனதற்கான காரணங்களை சொன்னாலும் கூட அவர்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் போனது தவறு என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அதிலும் இம்முறை சூர்யா, தேர்தல் ஆணையத்தின் விளம்பரங்களிலும் நடித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார்.

எனவே அவர் மீது வலைத்தளவாசிகள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

தேர்தல் என்பது முன்பே அறிவிக்கப்பட்ட ஒன்று. அதற்காக வசதியில்லாத ஏழை மக்கள் கூட வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து ஓட்டளிக்கின்றனர்.

ரயிலிலும், பஸ்லிலும் உட்கார இடம் இல்லாமல் நின்றவாறே வந்து தங்கள் ஜனநாயக கடமையை செய்தனர்.

ஆனால் தன்னாலேயே ஓட்டுப் போட வரமுடியாத சூர்யா, எதற்காக மக்களுக்கு அட்வைஸ் செய்தார் என்று கூறி வருகின்றனர்.