முதலில் விஜய்… அவரைத் தொடர்ந்து சூர்யா-ரஜினி-விக்ரம்..!


முதலில் விஜய்… அவரைத் தொடர்ந்து சூர்யா-ரஜினி-விக்ரம்..!

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி விஜய் நடித்த தெறி ரிலீஸ் ஆனது. இப்படம் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வசூல் வேட்டை செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து மே மாதம் 6ஆம் தேதி சூர்யாவின் 24 படம் ரீலீஸாகிறது. விக்ரம்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதன்பின்னர் மே மாத இறுதியில் அல்லது ஜுன் முதல் வாரத்தில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி வெளிவரவுள்ளது.

இதனையடுத்து, ஜுலையில் விக்ரமின் இருமுகன் ரிலீஸ் ஆகும் எனத் தெரியவந்துள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இதில் இருவேடங்களில் விக்ரம் நடிக்க, முதன்முறையாக இவருடன் நயன்தாரா, நித்யா மேனன் நடித்துள்ளனர்.

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் லடாக், பாங்காக் நாடுகளுக்கு செல்லவிருக்கின்றனர்.