விக்ரம், சூர்யா, தனுஷ், விக்ரம் பிரபு இவங்க ஏன் ஓட்டு போடல.?


விக்ரம், சூர்யா, தனுஷ், விக்ரம் பிரபு இவங்க ஏன் ஓட்டு போடல.?

நேற்று மே 16ஆம் தேதி, தமிழகத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
கொட்டும் மழையிலும் மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் வந்து வாக்களித்தனர்.

ஆனால் விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் வாக்களிக்கவில்லை.

தவிர்க்கமுடியாத காரணங்களால், அமெரிக்காவில் இருந்து திரும்ப முடியாத சூர்யா வாக்களிக்க முடியவில்லை என்றார்.

இவரைத் தொடர்ந்து இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், விக்ரம், சமந்தா, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரும் வாக்களிக்கவில்லை.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் அடிக்கடி வீடு மாறியதால், தங்களுக்காக வாக்குச் சாவடி மாறிவிட்டதால், எது என்பது தெரியாமல் வாக்களிக்கவில்லையாம்.

விக்ரம் பிரபு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வெளிநாட்டில் இருந்ததால் சென்னைக்கு வாக்களிக்க வரவில்லையாம்.