ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் விஜய்-சூர்யா..!


ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் விஜய்-சூர்யா..!

தெறி படத்திற்காக தனது ஒரிஜினல் தாடி மற்றும் ஒட்ட வெட்டிய போலீஸ் கட்டிங் என ரசிகர்களுக்கு விருந்தளித்தார் விஜய்.

மேலும் இப்படத்தின் ஒரு காட்சிகாக 100 அடி உயரத்தில் இருந்து குதித்தார். அட்லி டூப் போடலாம் என்று கூறியும், ரசிகர்களுக்காக விஜய் அதை செய்தார்.

தற்போது சூர்யாவும் இதுபோல் தன் 24 படத்திற்காக மேம்பாலத்திலிருந்து டூப் இல்லாமல் குதித்து இருக்கிறாராம்.

இதனை 24 பட புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் விக்ரம்குமார் தெரிவித்துள்ளார்.

‘சார் முன்ன போல ரசிகர்கள் இல்ல. ரொம்ப தெளிவா இருக்காங்க. டூப் எல்லாம் கண்டுபிடிச்சிடுவாங்க.

நானே குதிச்சா லைவ்வா இருக்கும். என்னோட ரசிகர்களுக்காக நானே செய்றேன்” என்று சூர்யா சொன்னதை இயக்குனர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.