மீண்டும் சென்னையில் தொடரும் விக்ரமின் இருமுகன்..!


மீண்டும் சென்னையில் தொடரும் விக்ரமின் இருமுகன்..!

‘இருமுகன்’ படத்திற்காக நயன்தாரா மற்றும் நித்யா ஆகிய இரண்டு நாயகிகளுடன் டூயட் பாடி வருகிறார் விக்ரம்.

ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் இதன் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம், நயன்தாரா பங்குபெற்ற பிரம்மாண்ட பாடல் காட்சியை படமாக்கினர்.

இனி அடுத்த கட்டப்படப்பிடிப்பு ஏப்ரல் 7ஆம் தேதி மீண்டும் சென்னையில் தொடங்கவிருக்கிறது.

சென்னையை முடித்துவிட்டு அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லவுள்ளனர். அங்கு ஏப்ரல் 25 தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

அதன்பின்னர் பாங்காக்கிலும் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறாராம் இயக்குனர்.