‘என்னை மெருகேற்றியது சென்னை வெள்ளம்…’ விக்ரம் உருக்கம்..!


‘என்னை மெருகேற்றியது சென்னை வெள்ளம்…’ விக்ரம் உருக்கம்..!

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கன மழையால் சென்னை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கியது.

இதனால், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் எந்த வித அடிப்படை வசதியும் இன்றி தத்தளித்தனர்.

எனவே, தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டு மக்களை துயரத்தில் இருந்து மீட்க உதவினர்.

நடிகர்கள் பலரும் முன்வந்து சேவை பணிகளில் ஈடுபட்டனர். மேலும் மற்ற மாநில மக்கள், நட்சத்திரங்கள் என அனைவரும் நிதியை தாராளமாக வழங்கினர்.

இதனால், எவரும் எதிர்பாராத வகையில் சென்னை வெகு சீக்கிரமே இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த நல்ல உள்ளங்களின் அர்ப்பணிப்பு மற்றும் மனித நேயத்தை போற்றும் வகையில் ஸ்பிரிட் ஆப் சென்னை என்ற பாடல் வீடியோவை விக்ரம் இயக்கியுள்ளார்.

இதில் இவருடன், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், நிவின் பாலி, ப்ருத்விராஜ், விஜய் சேதுபதி, பாபி, நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீதர் நடனம் அமைத்திருந்தார். இப்பாடலை இன்று யூடிப்பில் வெளியிடுகின்றனர்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து விக்ரம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Vikram Letter

 

Vikram Letter 2