லஷ்மிமேனனை காதலிக்கும் ‘விஐபி’ இயக்குனர்!


லஷ்மிமேனனை காதலிக்கும் ‘விஐபி’ இயக்குனர்!

என்னதான் அழகான கதாநாயகி கிடைத்தாலும், அவரை திரையில் மிக அழகாக காண்பிப்பது ஒளிப்பதிவாளரின் கைவண்ணம்தான். கதாநாயகியை ரசித்தால் மட்டுமே அவரால் இப்படி ஒரு உணர்வை ரசிகர்களுக்கு கொடுக்கமுடியும்.

கடந்த வாரம் வெளியான கொம்பன் படத்தில் நாயகி லஷ்மிமேனன் மிக அழகாகத் தெரிந்தார். காதல் காட்சிகள் படத்தில் குறைவாக இருந்தாலும் சில காட்சிகளிலேயே… முக்கியமாக கறுப்பு நிறத்தழகி பாடலில் கண்களால் பேசி ஜாலம் புரிந்தார்.

இந்நிலையில், ஒரு பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற கொம்பன் பட சிறப்பு நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் படத்தின் நாயகன் கார்த்தியும் இயக்குனர் முத்தையாவும் கூறியதாவது…

“படத்தில் லட்சுமிமேனனை மங்களகரமாக காட்ட வேண்டும் என்பதற்காக, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ரொம்ப மெனக்கெட்டார். கிட்டதட்ட லஷ்மியை காதலிக்கவே ஆரம்பித்து விட்டார். படம் நன்றாக வரவேண்டும் என்பற்காக அப்படியெல்லாம் செய்தார். அதனால்தான் படத்தில் அவருடைய ஒளிப்பதிவு அவ்வளவு அருமையாக அமைந்தது” என்றனர்.

‘ஆடுகளம்’, ‘சிறுத்தை’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘எதிர் நீச்சல்’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.