‘விஷால், ஆர்யா இருவரால் என் பேரு கெட்டுப் போச்சு’ – ஜெயம் ரவி ஓபன் டாக்


‘விஷால், ஆர்யா இருவரால் என் பேரு கெட்டுப் போச்சு’ – ஜெயம் ரவி ஓபன் டாக்

‘நிமிர்ந்து நில்’ என்ற ஒரு தான் நடித்த ஒரு படத்தை மட்டும் 2014ஆம் ஆண்டு தன் ரசிகர்களுக்கு அளித்தார் ஜெயம் ரவி. ஆனால் அந்தக் குறையை இந்த 2015ஆம் ஆண்டில் சேர்த்து வைத்து தீர்க்கப்போகிறார். ‘ரோமியோ ஜுலியட்’, ‘பூலோகம்’, ‘அப்பாடக்கர்’, ‘தனி  ஒருவன்’ போன்ற படங்களை இந்த ஆண்டே கொடுக்க இருக்கிறார். இதனால் ‘ஜெயம்’ ரவியின் ரசிகைகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது தான் நடித்துவரும் படங்கள் பற்றி ஒரு பேட்டி அளித்திருந்தார் அதில் கூறியதாவது…

“தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக  காமெடி கலந்த காதல் படங்கள் வரவில்லை. அந்தக் குறையை ‘ரோமியோ  ஜுலியட் படம் நிச்சயமாக தீர்க்கும். இதில் ஆர்யா முக்கியமான கேரக்டரில்  நடித்திருக்கிறார். ஹன்சிகா ஏர் ஹோஸ்டஸ் ஆக நடித்திருக்கிறார்.

‘எங்கேயும் காதல்’ படத்தில் ஹன்சிகா பள்ளி மாணவியாக இருந்தவர் இப்போது, கல்லூரிப் பெண்ணாக மாறிவிட்டார். 4 வருடங்களில் அவருடைய வளர்ச்சி என்னை ஆச்சரியப்பட வைத்துவிட்டது. இத்தனை ஆண்டுகளாக சினிமாவிலும் இருந்தும் ரசிகர்களின் ரசனையை முழுவதுமாக புரிந்துக் கொள்ள முடியவில்லை. சில படங்கள் தோல்வி அடையும்போது நிறைய கற்றுக் கொள்கிறேன். அனைத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் புதிய இயக்குனர்கள் போன்ற அனைத்து இயக்குனர்களுடனும் பணிபுரிய ஆசை உள்ளது” என்றார்.

இறுதியாக அவரது திரையுலக நண்பர்கள் ஆர்யா, விஷால் குறித்து கேட்டதற்கு…

“ஆர்யா, விஷால் இருவரும் காதலித்தோ அல்லது வீட்டில் பார்க்கும் பெண்ணையோ கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் இன்னும் பேச்சுலராக இருப்பதால் எங்க வீட்ல என் பேரும் கெட்டுப் போச்சு” என்று ஓபன் டாக் கொடுத்தார் ஜெயம் ரவி.