‘நிஜ காதல் வலியின் போது நான் அழுத நடிப்பே சிறந்தது’ – விஷால்


‘நிஜ காதல் வலியின் போது நான் அழுத நடிப்பே சிறந்தது’ – விஷால்

விஷால் சமீபத்திய பேட்டியில் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே உறங்குகிறேன் என்று கூறியிருந்தார் அல்லா. நிஜமாகவே மனிதர் படுபிஸியாகதான் இருக்கிறார். தற்போது நடிகர் சங்கத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் மனிதர் உறங்குவாரோ என்னவோ? தீவிரமாக பணியாற்றி கொண்டிருக்கிறார்.

இவை ஒருபுறம் இருந்தபோதிலும் கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் எம்.ஓ.பி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஷால் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் கலந்து கொண்டனர். அப்போது வழக்கம்போல மாணவிகள் இவர்களிடம் கேள்விகளை கேட்டனர்.

அப்போது ஒரு மாணவி விஷாலிடம்… “நீங்கள் நடித்த எந்தப் படத்தில் உங்களது முழுமையான சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த விஷால்… “இதே கேள்வியை சில வருடங்களுக்கு முன் ஒருவர் என்னிடம் கேட்டார். அப்போது இதற்கான பதில் என்னிடம் இல்லை. ஆனால் தற்போது சொல்கிறேன்.

என்னுடைய காதல் தோல்விக்கு பிறகு நான் முழுமையாக உடைந்து போயிருந்தேன். எதை செய்யவும் பிடிக்கவில்லை. ஆனால் இதான் என் தொழில். இதை விட்டால் வேறு வழியில்லை என்பதால் ஷூட்டிங் சென்றேன். என்னுடை வலி, துக்கம் என அனைத்தையும் ஓரங்கட்டி மேக்கப் போட்டேன். அந்த உண்மையான தருணம்தான் என்னுடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்டது” என்றார். ஆனால் படத்தின் பெயரை விஷால் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.