அன்னையர் தினத்தில் அன்னதானம் செய்த விஷால்-ஐஸ்வர்யா!


அன்னையர் தினத்தில் அன்னதானம் செய்த விஷால்-ஐஸ்வர்யா!

தாயை விட சிறந்த கோயிலும் இல்லை. தெய்வமும் இல்லை என்பர். நாம் வணங்கும் தெய்வம் நம் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் நம் கண்முன் வாழும் தெய்வம் நம்மை ஈன்ற தாய். அந்த தாயை நாம் வழிபடவில்லை என்றாலும் அவளை வாழ்க்கை முழுவதும் நம்முடன் வைத்து சந்தோஷமாக வாழ வழி செய்ய வேண்டும்.

ஆனால் இன்று பள்ளிகளை விட, ஆதரவற்றோர் அன்னையர் இல்லம் நம் நாட்டில் அதிகமாகிவிட்டது. நம்மை பெற்ற தாயை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்பதால் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட அன்னையர் தினத்தில் நடிகர் விஷால் அவரது தங்கை ஐஸ்வர்யாவுடன் இணைந்து அன்னதானம் வழங்கி ஆதரவற்ற அன்னையர்களை மகிழ்வித்தார். சென்னை, மெர்சி ஹோமில் உள்ள 200க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை வழங்கி அன்னையர் தினத்தை இருவரும் கொண்டாடியுள்ளனர்.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் விஷால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.