திட்டித் தீர்த்துவிட்டு ‘நடிப்பு’க்காக இணையும் விஷால்-ராதாரவி!


திட்டித் தீர்த்துவிட்டு ‘நடிப்பு’க்காக இணையும் விஷால்-ராதாரவி!

சமீபத்தில் நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மிகவும் பரப்பரப்பாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் விஷால் மற்றும் ராதாரவியின் பனிப்போர்தான். பொதுமேடை என்று கூட பாராமல் ஒருவரை ஒருவர் சரமாரியாக கடுமையாக தீட்டி தீர்த்தனர். இதில் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்ட விஷால் அமோக வெற்றி பெற்றார்.

மேலும் விஷாலை நாய் என்றெல்லாம் கூட திட்டியவர் ராதாவி என்பது நாம் அறிந்ததே. அந்த வார்த்தைகளினால் ஏற்பட்ட வலி விஷாலுக்கு ஆறியிருக்குமா? எனத் தெரியவில்லை. ஆனால் அதற்குள் விஷாலும் ராதாரவியும் ஒரு படத்திற்காக இணையவிருக்கிறார்களாம்.

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய முத்தையா தற்போது ‘மருது’ என்ற படத்தையும் இயக்கவுள்ளார். இதில்தான் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் விஷாலின் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். முதலில் இந்த வேடத்தில் லெஷ்மிமேனன் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.