அரசியல்வாதியை மிஞ்சிய விஷால்… சொன்னதை செய்தார்..!


அரசியல்வாதியை மிஞ்சிய விஷால்… சொன்னதை செய்தார்..!

சமீபகாலமாக சொன்னதை செய்வோம்…. செய்வதை சொல்வோம்.. சில நேரம் சொல்லாததையும் செய்வோம் போன்ற கவர்ச்சிகரமான வசனங்களை தேர்தல் பிரச்சாரங்களில் கேட்டு இருப்பீர்கள்.

ஆனால் வாக்குறுதி கொடுக்கும் அரசியல்வாதிகள் அவற்றை சில நேரங்களில் நிறைவேற்றாமல் கூட போகலாம்.

ஆனால் சிலமாதங்களுக்கு முன்பு, தான் மாணவர்கள் மத்தியில் சொன்னதை தற்போது நிறைவேற்றியுள்ளார் விஷால்.

கடந்த ஆண்டு மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு அரசுப்பள்ளி விழாவில் விஷால் கலந்து கொண்டார்.

அப்போது 12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் கல்விச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

அதன்படி நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, அப்பள்ளியில் படித்த பத்மபிரியா (1137 / 1200), புவனேஸ்வரி (1128/1200) மற்றும் ஷக்தி (1082 /1200) ஆகியோர் மூவரின் கல்வி செலவுகளை ஏற்றுள்ளார்.