“அஜித் பாட்டு…. அது ஒரு செய்தியா…?” விளக்கம் கொடுத்த விஷால்..!


“அஜித் பாட்டு…. அது ஒரு செய்தியா…?” விளக்கம் கொடுத்த விஷால்..!

பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் சங்கத்தின் ஸ்டார் கிரிக்கெட் போட்டி வெற்றிப் பெற்றதையொட்டி, நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், விஷால், பொன்வண்ணன், கார்த்தி மற்றும் ரமணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டி அறிவிக்கப்பட்ட நாள்முதல் விஷால்-அஜித் குறித்த சர்ச்சைகள் உலாவ தொடங்கின. எனவே இன்றைய சந்திப்பிலும் இதுகுறித்து விஷாலிடம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து விஷால் கூறியதாவது…

‘அஜித்திற்கும் எனக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அஜித் என்று கூப்பிட கூடாது. அவரை சார் என்று மரியாதையுடன் கூப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

நான் எல்லோரையும் நேசிக்கிறேன். அவர் மீதும் அதிக மரியாதை வைத்துள்ளேன். ரஜினி, கமல், அஜித், விஜய் எல்லோரும் மீதும் மரியாதை உள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்திரிகை அஜித் பாட்டை நான் நிறுத்த சொன்னதாக செய்தி வெளியிட்டது. அப்படி ஒரு சம்பவமே இல்லை. என் பாட்டை கூட நான் நிறுத்த சொல்லலாம்.

இது ஒரு பெரிய செய்தியா? நாட்டில் எவ்வளவோ பிரச்சினை உள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஒரு குறிப்பிட்ட இணையத்தளம் நான் சொன்னதாக ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. நான் அப்படி ஒரு பேட்டியே கொடுக்கவில்லை” என்றார்.

இதே கேள்விக்கு பொண்வண்ணன் கூறியதாவது…

‘அஜித்தை எனக்கு நன்றாக தெரியும். அவர் இந்த நிகழ்ச்சி என்றில்லை. கடந்த ஆறு, ஏழு வருடங்களாக எந்த ஒரு பொது நிகழ்ச்சி மற்றும் விளம்பரங்களிலும் கலந்துக் கொள்வதில்லை.

நாங்கள் நிறைய முறை சந்தித்து பேசியுள்ளோம். அவர் வெளிப்படையாக பேசுவார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை’ என்றார்.