உயிரிழந்த நாடக நடிகர் குடும்பத்திற்கு விஷால் உதவி..!


உயிரிழந்த நாடக நடிகர் குடும்பத்திற்கு விஷால் உதவி..!

திருச்சி மாவட்டம் நாடக நடிகர் சங்க உறுப்பினரும் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் T.P.கணேசன் அவரும் அவருடைய குடும்பத்தினர்களும் மிகவும் வறுமையில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தனர்கள்.

நாடக நடிகர் T.P.கணேசன் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போதிய வருமானம் இல்லாததால் சிகிச்சை தொடர இயலாமல் சமீபத்தில் நாடக நடிகர் T.P.கணேசன் உயிர் இழந்தார்.

இதனையறிந்த நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் உடனடியாக அவர் இயக்கி வரும் தேவி அறக்கட்டளை மூலம் ரூ. 25,000/- குடும்ப நல நிதியாக T.P.கணேசனின் மனைவி தமிழரசியிடம் விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரி மற்றும் நிர்வாகிகள் அதற்கான காசோலை வழங்கினார்கள்.

மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு மாதம் தோறும் குடும்ப ஓய்வூதியமாக ரூ. 2,500/- வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.