ரஜினியை கலங்காதே என்று சொன்னவருக்கு உதவிய விஷால்..!


ரஜினியை கலங்காதே என்று சொன்னவருக்கு உதவிய விஷால்..!

நடிகர் சங்கத்தில் பதவியேற்கும் முன்னரே, நிறைய உதவிகளை செய்து வந்த விஷால், தற்போது பதவியேற்ற பின் நலிந்த கலைஞர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் காளிதாசன் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு வயது 68.

இதனையறிந்த விஷால் அவருடைய மருத்துவ செலவிற்கு ரூ.25,000 கொடுத்து உதவி புரிந்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அருணாச்சலம்’ படத்தில் இடம் பெற்ற ‘தலைமகனே கலங்காதே… தனிமை கண்டு மயங்காதே’ என்ற பாடலை எழுதியவர்தான் இந்த காளிதாசன்.
இதுதவிர 100க்கும் மேற்பட்ட திரையிசை பாடல்களை எழுதியுள்ளார்.

இவர் பெரும்பாலும் தேவாவின் இசையில் உருவான தாளத்திற்கு பாடல் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.