சூட்டிங்கில் படுகாயம்… ஆனாலும் மகிழ்ச்சியே… விஷால் ஓபன் டாக்..!


சூட்டிங்கில் படுகாயம்… ஆனாலும் மகிழ்ச்சியே… விஷால் ஓபன் டாக்..!

முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்து வரும் ‘மருது’. இதன் படப்பிடிப்பு இராஜபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படப்பிடிப்பின் போது விஷாலுக்கு காயம் ஏற்பட்டது.

இருந்த போதிலும் எந்தவித தடையும் இன்றி காட்சிகளை நடித்துக் கொடுத்தாராம் விஷால்.

இதன் சூட்டிங் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் முடிந்ததே எனக்கு மகிழ்ச்சிதான் என்று தெரிவித்துள்ளார் விஷால்.

இப்படத்தில் விஷாலுடன் சூரி, ராதாரவி, ‘தாரை தப்பட்டை’ வில்லன் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைத்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் சார்பாக அன்புச்செழியன் தயாரித்து வருகிறார்.