கபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..!


கபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..!

கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பாக ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரித்துள்ள படம் ‘காத்தாடி’

இதில் நாயகியாக கபாலி புகழ் தன்ஷிகா நடித்துள்ளார்.

நாயகனாக அவிஷேக் நடித்துள்ளார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நடிகை மகேஸ்வரியின் சகோதரர் ஆவார்.

இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோ பாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், சுமார் மூஞ்சி குமார் டேனியல், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், வினோதினி, மதுமிதா, நடித்துள்ளனர்.

எஸ் கல்யாண இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான கத சொல்ல போறோம் படத்தின் இயக்குனர் ஆவார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று இரவு 8 மணிக்கு, தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார் விஷால்.