‘ராதாரவி சிறந்தவர்… ஆர்கே சுரேஷ் மனுஷனே கிடையாது..’ விஷால் பேட்டி.!


‘ராதாரவி சிறந்தவர்… ஆர்கே சுரேஷ் மனுஷனே கிடையாது..’ விஷால் பேட்டி.!

முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள படம் ‘மருது’.

இவர்களுடன் சூரி, ராதாரவி, ஆர் கே சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதன்முறையாக மலையாள நடிகை லீலா அவர்கள் விஷாலின் பாட்டியாக நடித்துள்ளார்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பாக அன்புசெழியன் தயாரித்துள்ளார்.

இப்படம் குறித்து விஷால் கூறியதாவது…

“’அவன் இவன்’ படத்திற்குப் பிறகு அருமையான கிராமத்து கதையில் நடித்துள்ளேன்.

இது ஒரு பாட்டி மற்றும் பேரன் பற்றிய உணர்வுப்பூர்வமான கதை. மலையாள நடிகை லீலா என் பாட்டியாக நடித்துள்ளார். அவருக்கு இதான் முதல் தமிழ் படம்.

ராஜபாளையம் பகுதியில்தான் படப்பிடிப்பு நடந்தது. அந்த ஊரில் 72 நாட்கள் வாழ்ந்தது மறக்க முடியாத அனுபவம். மீண்டும் மீண்டும் அந்த ஊருக்கு போக ஆசைப்படுகிறேன்.

அந்த ஊரில் உள்ள அழகழகான பெண்களை கண்டு வியந்தேன். அவர்களை சைட் அடித்தேன். ரசித்தேன்.

நடிகர் சங்க தேர்தலில் நானும் ராதாரவி அண்ணனும் மோதிக் கொண்டாலும் அது வேறு. இது வேறு. அவர் சிறந்த நடிகர்.

படப்பிடிப்புக்கு ராதாரவி அண்ணன் வந்தார் என்னைக் கட்டிப் பிடித்தார். நடிகர் சங்கத்துக்கு எந்த உதவி தேவைப் பட்டாலும் சொல்லுப்பா செய்றேன்’ என்றார்.

இதில் வில்லனாக வரும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் ஒரு மனுஷனே கிடையாது. அவர் ஒரு ராட்சசன் என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு அவர் வெளுத்து கட்டியிருக்கிறார். எங்கள் காட்சிகள் நேஷனல் ஜியாகிரபி போல மிரட்டும்.

marudhu vishal

இன்று கிராமம் பற்றி படம் எடுக்க ஆள் இல்லை. ஆனால் முத்தையா உணர்வு பூர்வமாக கதை சொல்வதில் வல்லவர். வசனம் படத்தில் அழுத்தமாக இருக்கும்.

‘மருது’ படம் மே 20இல் வெளியாகிறது. இது நிச்சயமாக அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்.”

இவ்வாறு விஷால் தெரிவித்தார்.