“ஹீரோயின்ஸ் ஏன் கிரிக்கெட் ஆடவில்லை…?’ விஷால் கலக்கல் பதில்..!


“ஹீரோயின்ஸ் ஏன் கிரிக்கெட் ஆடவில்லை…?’ விஷால் கலக்கல் பதில்..!

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதன் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விஷால், கார்த்தி, நாசர், பொன்வண்ணன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஒரு பத்திரிகையாளர்? ஹீரோயின்கள் ஏன் கிரிக்கெட் ஆடவில்லை..? என கேட்டார்.

அதற்கு பொன்வண்ணன் கூறியதாவது… “நிறைய வசூல் ஆகும் என நினைக்கிறேன். அப்படி ஒரு ஐடியா உள்ளது. பார்க்கலாம்” என்றார்.

ஆனால், அதற்கு பதிலளித்த்த விஷால் ‘நிறைய நட்சத்திரங்கள் வருவதால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தனை ஹீரோக்கள் விளையாடியதற்கே நிறைய பேர் கஷ்டப்பட்டார்கள்.

கார்த்தி பவுன்சர் வேலை எல்லாம் பார்த்தார். இதில் ஹீரோயின்கள் ஆடினால் அது ரொம்ப கஷ்டம். அது நிச்சயம் நடக்காது” என்று தெரிவித்தார்.