‘டிக்கெட் இல்லாமல் பயணிப்பதும் திருட்டு டிவிடியும் ஒன்றுதான்…’ விஷால் வேண்டுகோள்..!


‘டிக்கெட் இல்லாமல் பயணிப்பதும் திருட்டு டிவிடியும் ஒன்றுதான்…’ விஷால் வேண்டுகோள்..!

பிரபல நடிகரும் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் தனியார் பேருந்து (ஆம்னி பஸ்) உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்று அனுப்யியுள்ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

“பல கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் படங்களை தியேட்டரில் திரையிட்டு ரசிகர்கள் ரசித்தால் மட்டுமே அந்த முதலீட்டை திரும்ப பெற முடியும்.

இதில் தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் திருட்டு விசிடி ஆகியவற்றின் பாதிப்புகளை மீறி வெற்றி பெற போராட வேண்டிய நிலையில் உள்ளோம். இதுவே திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினர்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் தனியார் பேருந்துகளில் சட்டவிரோதமாக புதுப்படங்களை ஒளிபரப்புவது முறையல்ல. பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்வதும் திருட்டு விசிடியை பஸ்களில் ஒளிபரப்புவதும் சட்டவிரோதமானதே!

இதுவரை தங்கள் கவனத்தை மீறி ஓட்டுனர்களால் இந்த தவறு நடந்திருந்தால் இனிமேல் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம். தங்களுடைய முழு ஒத்துழைப்பை திரையுலகினருக்கு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் விஷால் கேட்டு கொண்டுள்ளார்.