திருட்டு விசிடியை ஒழிக்க தீர்வு சொல்லும் விஷால்..!


திருட்டு விசிடியை ஒழிக்க தீர்வு சொல்லும் விஷால்..!

சினிமாவை மையப்படுத்தி உருவாகினாலும் இன்று சினிமாவையே ஓரங்கட்டி திருட்டு விசிடி உருவெடுத்துள்ளது.

சினிமா இல்லையென்றால் திருட்டு விசிடிக்கு வேலையும் இல்லை. ஆனால் சினிமாவை இது அழிப்பதன் நோக்கம் என்ன? என்பது புரியாமல் திரையுலகினர் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திருட்டு விசியை ஒழிக்க விஷால் தனது யோசனையை தெரிவித்துள்ளார்.

அதில்… “இயக்குனர் சேரனின் C2H போலவே ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், பத்தாயிரம் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ஒரு படம் ரிலீஸான இரண்டே வாரங்களில் அப்படத்தின் ஒரிஜினல் டிவிடியை விற்பனை செய்ய நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.

இதனால் மக்கள் திருட்டு விசிடியை எதிர்பார்க்காமல் ஒரிஜினல் டிவிடிக்காக காத்திருப்பார்கள். இதனால் பைசரசி, திருட்டு டிவிடிக்கள் குறையும்.” என்றார்.