பாலாவுக்கு பிறகு சுராஜுக்காக திருடும் விஷால்…!


பாலாவுக்கு பிறகு சுராஜுக்காக திருடும் விஷால்…!

விஷால்-ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்துள்ள மருது படம், மே 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து நீண்ட நாள் கிடப்பில் கிடந்த மதகஜராஜா படம் ஜீன் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

இதனிடையில், சுராஜ் இயக்கும் கத்தி சண்டை படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். இதில், நாயகியாக தமன்னா நடிக்க, வில்லனாக ஜெகதிபாபு நடிக்கிறார்.

இப்படத்தை எஸ் நந்தகோபால் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் விஷால் நடிக்கவுள்ள கேரக்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதில் திருடனாக நடிக்கிறாராம்.

இதற்கு முன்பே அவன் இவன் படத்தில் பாலாவுக்காக திருடன் வேடம் இவர் ஏற்றிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.