விஷாலுடன் இணையும் வடிவேலு… மீண்டும் ‘திமிரு’..?


விஷாலுடன் இணையும் வடிவேலு… மீண்டும் ‘திமிரு’..?

முத்தையா இயக்கத்தில் ‘மருது’ படத்தை முடித்து விட்டு, மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால்.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்த படிக்காதவன், மாப்பிள்ளை, உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். நந்தகோபால் இப்படத்தை தயாரிக்கிறார்

இப்படத்திற்கு கத்திச் சண்டை எனப் பெயரிட்டுள்ளனர். இதில் விஷாலின் ஜோடியாக மடோனா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் அவருக்கு பதில் வேறு ஒருவர் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு நடிக்கிறார்.

விஷாலுடன் திமிரு படத்தில் நடித்தவர் வடிவேலு என்பது தாங்கள் அறிந்ததே.