ஒரே நாளில் இணைந்த விஷால், சிபிராஜ், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி..!


ஒரே நாளில் இணைந்த விஷால், சிபிராஜ், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி..!

நேற்று என்ன விசேஷமோ தெரியல. தமிழ் சினிமாவில் நான்கு படங்களுக்கு பூஜை போடப்பட்டது. இந்த படத்தின் நான்கு ஹீரோக்களுமே இறுதியாக தலா ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துள்ளனர்.

கதகளி படம் விஷாலுக்கும், சேதுபதி படம் விஜய் சேதுபதிக்கும், பிச்சைக்காரன் படம் விஜய் ஆண்டனிக்கும் மற்றும் போக்கிரி ராஜா படம் சிபிராஜீக்கும் வெற்றிப்படங்களாக அமைந்தது.

இந்நிலையில் விஷால் நடிக்க, மிஷ்கின் இயக்கவுள்ள ‘துப்பறிவாளன்’ என்ற படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது.

விஜய் சேதுபதி மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் ‘‘ஆண்டவன் கட்டளை’’ படத்தின் பூஜை போடப்பட்டது. காக்கா முட்டை மணிகண்டன் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

விஜய் ஆண்டனி மற்றும் மியா ஜார்ஜ் நடிக்கும் ‘எமன்’ படத்தின் பூஜையும் போடப்பட்டது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷாந்தினி உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை எம். மணிகண்டன் இயக்குகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.