‘மதகஜராஜா’வை முந்திக் கொண்ட மருது…!


‘மதகஜராஜா’வை முந்திக் கொண்ட மருது…!

‘கடல்’ படத்தை வெளியிட்டு நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ வெளியிட தடை விதித்தனர்.

இதனால், ‘மதகஜராஜா’ வை வெளியிட பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

எனவே, படத்தின் நாயகன் விஷால் இப்படத்தை வெளியிட முன்வந்தார்.

அதனை தொடர்ந்து ரிலீஸ் தேதியுடன் பட விளம்பரங்களும் வந்தன. ஆனால் மீண்டும் மீண்டும் படம் தள்ளிப் போடப்பட்டது.

இறுதியாக இந்த மாதமே படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 10ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையில் முத்தையா இயக்கத்தில் விஷால் ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘மருது’ திரைப்படம் மே 20ம் தேதி வெளியாகும் என உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.