‘தெறி’ விஜய் போலீஸ் ஆனார்… ‘மருது’ விஷால் என்ன ஆனார்..?


‘தெறி’ விஜய் போலீஸ் ஆனார்… ‘மருது’ விஷால் என்ன ஆனார்..?

கொம்பன் படத்தை தொடர்ந்து, விஷால் நடிக்க மருது படத்தை இயக்கி வருகிறார் முத்தையா.

இப்படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்து வருகிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கில் விஷால் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே, மருது படத்தை தெலுங்கில் ராயுடு என பெயர் மாற்றி வெளியிடவுள்ளனர். இப்படம் மே 20ஆம் தேதி வெளியாகிறது.

விஜய்யின் தெறி படமும், போலீஸ் என பெயர் மாற்றத்துடன் வெளியானது தாங்கள் அறிந்ததே.