விஷால் பதவியேற்றும் எம்ஜிஆருக்கு இந்த நிலைமையா..?


விஷால் பதவியேற்றும் எம்ஜிஆருக்கு இந்த நிலைமையா..?

நடிகர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்ற விஷால் பல்வேறு நற்காரியங்களை செய்து வருகிறார்.

மற்றொரு புறம் தன் படங்களில் விறுவிறுப்பாக நடித்து, ஒவ்வொரு படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா (MGR) திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வருகிறது.

நடிகர் சங்கத்தில் விஷால், பதவியேற்றதும் இப்படத்திற்கு விடிவுகாலம் பிறந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் படம் தள்ளிப்போவதால், எம்ஜிஆருக்கே இந்த நிலைமையா என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Related