‘விஜய் படத்தயாரிப்பாளர் ஏன் நடவடிக்கை எடுக்கல…’ விஷால் கேள்வி..!


‘விஜய் படத்தயாரிப்பாளர் ஏன் நடவடிக்கை எடுக்கல…’ விஷால் கேள்வி..!

அண்மைகாலமாக சினிமாவை மிரட்டும் வகையில் திருட்டு விசிடி விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

சிலநாட்களுக்கு முன், தெறி மற்றும் மனிதன் ஆகிய படங்கள் பேருந்தில் திரையிடப்பட்டதை கண்டித்து காவல்துறையினரிடம் விஷால் புகார் அளித்திருந்தார்.

அதன்படி பேருந்தின் ஓட்டுனரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து பேச இன்று திடீரென பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் விஷால்.

இவருடன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் கலந்து கொண்டார். அப்போது விஷால் பேசியதாவது…

“தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு இதுபற்றி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் “திருட்டு விசிடிக்கு உடந்தையாக இருக்கும் தியேட்டர்கள் மீதும் கடும் நடவடிக்கை தேவை” எனக் கேட்டுக் கொண்டார்.

ஞானவேல்ராஜா பேசும்போது… “திருட்டு விசிடியால் தங்களுக்கு 80% நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக, நாளை பத்திரிகையாளர்களை சந்தித்து, தாணு பேசக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.