2040ல் சென்னை எப்படியிருக்கும்? படம் காட்டும் சிவி.குமார்!


2040ல் சென்னை எப்படியிருக்கும்? படம் காட்டும் சிவி.குமார்!

‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’ படங்களை தொடர்ந்து விஷ்ணு சீனுராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனை தொடந்து விஷ்ணு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இன்று நேற்று நாளை’.

சி.வி. குமார் தயாரித்துள்ள இப்படத்தை ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். விஷ்ணுவுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்க, கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாய் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

‘இன்று நேற்று நாளை’ என்ற இப்படத்தின் தலைப்பை பார்த்தாலே படத்தின் கதை சொல்லும். நம் வாழ்க்கையின் மூன்று கட்டங்களை பதிவு செய்திருக்கிறாராம் இயக்குனர். மூன்று விதமான டைம் மிஷன் களத்தை காட்ட போகிறது.  கடந்த காலம், நிகழ் காலத்தை காட்டிவிடலாம். ஆனால் எதிர்காலத்தை எப்படி கணிப்பது? அதான் இப்படத்தின் ஹைலைட்டாம். அதுவும் நம் தலைநகர் சென்னை 25 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருக்கும்? என்பதை நவீன தொழில் நுட்ப உதவியுடன் அருமையாக காட்டியுள்ளார்களாம்.