கமலுடன் நடிக்கவில்லை என்பதால் விவேக் மோதுகிறாரா?


கமலுடன் நடிக்கவில்லை என்பதால் விவேக் மோதுகிறாரா?

‘உத்தமவில்லன்’ படத்தை தொடர்ந்து கமல் நடித்துள்ள ‘பாபநாசம்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. ரம்ஜான் ரிலீஸாகவிருந்த இப்படம் அதற்கு முன்பே ஜூலை 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. அந்நாளில் விவேக்கின் ‘பாலக்காட்டு மாதவன்’, அருள்நிதியின் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ மற்றும் ஒரு சில படங்களும் வெளியாகவிருக்கின்றன.

இதற்கிடையில் ‘பாபநாசம்’ படத்தின் திடீர் வெளியீட்டுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ தங்கள் படங்களை தள்ளிவைத்து விட்டனர். அருள்நிதி நடித்துள்ள ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தை ஜூலை 31ந் தேதி ஒத்திவைத்து விட்டனர். எனவே விவேக்கின் படமும் தள்ளிப்போகும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் கமலுக்கு எதிராக மறைமுகமாக ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் விவேக். அதில் அவர் கூறியதாவது… “‘பாபநாசம்’ தியேட்டர்களை ஆக்கிரமிக்கலாம். இருந்தபோதிலும் ஊடகம் மற்றும் என் ரசிகர்கள் ஆதரவுடன் ‘பாலக்காட்டு மாதவன்’ வெற்றியடையும்” என்று தெரிவித்துள்ளார்.

கமலுடன் நடிக்கவில்லை என்பதால் அவர் படத்துடன் தன் படத்தை வெளியிட்டு ஆறுதல்படுகிறாரா விவேக் (அல்லது) நடிக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தன் படத்தை மோதவிட்டு பார்க்கிறாரா விவேக் என்ற பேச்சு கோலிவுட்டில் எழுந்துள்ளது.