கயல் சந்திரன் – தொகுப்பாளினி அஞ்சனா திருமணம்..!


கயல் சந்திரன் – தொகுப்பாளினி அஞ்சனா திருமணம்..!

கயல் என்ற ஒரே படத்தில் நடித்து தமிழக ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் அதன் நாயகன் சந்திரன்.

ரசிகர்களை ஈர்த்தவர் ஒரு டிவி தொகுப்பாளினியையும் ஈர்த்து விட்டார்.

பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவும் சந்திரனும் ஒரு விழாவில் சந்திக்க, அன்று முதல் நட்பு தொடங்கியது.

பின்னர் என்ன? அதுவோ காதலாக கனிந்து, கடந்த நவம்பர் 29ஆம் நிச்சயதார்த்தத்தில் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

பிரபு சாலமன் தயாரித்து வரும் ‘பைசல்’ மற்றும் பிவிபி சினிமாஸ் தயாரித்து வரும் ‘கிரகணம்’ ஆகிய படங்கள் சந்திரன் நடிப்பில் தற்பொழுது உருவாகி வருகிறது.