டிவி தொகுப்பாளர் ரம்யா விவாகரத்து பெறப் போகிறாரா?


டிவி தொகுப்பாளர் ரம்யா விவாகரத்து பெறப் போகிறாரா?

விஜய் டிவி டூ தமிழ் சினிமா – இந்த ரூட்ல ஏதாவது மேம்பாலம் இருக்கிறதா? என்று தெரியவில்லை. சந்தானம், ஜெகன், சிவகார்த்திகேயன், கோபிநாத், மாகாபா ஆனந்த் உள்ளிட்டோரை தொடர்ந்து தொகுப்பாளினி ரம்யாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்.

தொலைக்காட்சி தவிர்த்து நிறைய சினிமா சார்ந்த விழாக்களை தொகுத்து வருகிறார் இவர். இந்நிலையில் கடந்த ஆண்டு அப்ரஜித் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன்பு வரை சினிமா வாய்ப்புகளை மறுத்து வந்த இவர் அண்மையில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.

இப்படம் குறித்த சமீபத்திய பேட்டியில்… “சினிமா பயணம் ஒரு வித்தியாசமான பயணம். அதில் தொடர்ந்து பயணம் செய்ய விரும்புகிறேன். பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசை” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது ரம்யா தன் அம்மா வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் கணவருடன் வாழ பிடிக்கவில்லை. விவாகரத்து பெற்றுத் தர வேண்டி பெற்றோரிடம் கேட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.