அஜித்துக்கு எச்சரிக்கை… வாட்ஸ்அப்பில் பரவும் வாய்ஸ்…!


அஜித்துக்கு எச்சரிக்கை… வாட்ஸ்அப்பில் பரவும் வாய்ஸ்…!

நடிகர் சங்கத்திற்கும் நட்சத்திர கிரிக்கெட்டிற்கும் எதிராக அஜித் பேசினாரா? என்ற விவாதங்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஒரு நடிகராக இருந்துக் கொண்டு அஜித் இப்படி பேசலாமா என்ற சர்ச்சைகளும் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் அஜித்துக்கு எதிராக வாட்ஸ்அப்பில் பதிவு செய்யப்பட்ட வாய்ஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அஜித்தை அவர் கடுமையாக சாடியுள்ளார். அதன் விவரம் இங்கே…

“அஜித் படங்களும் பிரச்சினைக்கு விதிவிலக்கல்ல. அவைகள் பிரச்சினைகள் சிக்கிய போது, நடிகர் சங்கம் அவற்றை தீர்த்து வைத்துள்ளது.

வேதாளம் படத்தின் டிக்கெட்டிற்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டபோது அதற்கு எதிராக அஜித் ஒரு கருத்தைக் கூட சொல்லவில்லை.

நடிகர் சங்க நல நிதிக்காக கலை நிகழ்ச்சி, கிரிக்கெட் போட்டி நடத்துவது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. மக்களும் கட்டணம் கொடுத்து பார்த்துள்ளனர். அவர்கள் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை.

சங்கத்தின் முடிவுகளில் அஜித்துக்கு உடன்பாடு இல்லையென்றால், தன் மறுப்பை கடிதம் மூலமாக, அறிக்கை மூலமாக தெரிவித்து இருக்க வேண்டும். தன் ரசிகர்களை சங்கத்திற்கு எதிராக தூண்டிவிடுவது நாகரீகம் அல்ல.

நடிகர் சங்கம் அவருக்கு பிடிக்கவில்லையென்றால் உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்யட்டும்.

நலிந்த நடிகர்களின் நலனுக்காக நடிகர் சங்கம் நல்ல அரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று அந்த வாய்ஸ் தெரிவித்துள்ளது.