விஜய்யுடன் நடிக்கமுடியாது என மறுக்கும் ‘ராஜ்(ஜா)’க்கள்!


விஜய்யுடன் நடிக்கமுடியாது என மறுக்கும் ‘ராஜ்(ஜா)’க்கள்!

இளையதளபதி விஜய்யுடன் மீண்டும் நடிக்க அவரவர் க்யூவில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அட்லி இயக்கும் ‘விஜய் 59’ படத்தில் நடிக்க இருவர் மறுத்துள்ளனர். அவர்கள் இருவரும் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்துவருபவர்கள்.

சில நாட்களுக்கு முன்பு ‘விஜய் 59’ ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரகாஷ்ராஜை அழைத்துள்ளனர். ஆனால் அவர் ஏதோ ஒரு காரணத்தினால் மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய்யின் ‘கில்லி’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர் பிரகாஷ்ராஜ் என்பது தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில் விஜய்யுடன் ‘நண்பன்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் நடித்த சத்யராஜை மீண்டும் விஜய்யுடன் நடிக்க கேட்டுள்ளனர். மேலும் அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்திலும் சத்யராஜ் நடித்துள்ளார். எனவே ஒப்புக்கொள்ளுவார் என்று நினைத்த படக்குழுவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். இம்முறை சத்யராஜும் மறுத்துள்ளார்.

தற்போது தெலுங்கு மற்றும் மற்ற மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சத்யராஜ். எனவே, விஜய் படத்தில் நடிக்க தேதிகள் இல்லை என்று கூறிவிட்டாராம். எனவே அக்கேரக்டருக்கான நடிகரை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.