‘நாங்க ஒரே குடும்பம்…’ நயன்தாரா விவகாரம் பற்றி சிம்பு!


‘நாங்க ஒரே குடும்பம்…’ நயன்தாரா விவகாரம் பற்றி சிம்பு!

‘வாலு’ படத்திற்கு பிறகு ‘இது நம்ம ஆளு’ படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் சிம்பு. ஆனால் அப்படத்தை போலவே இப்படத்திலும் இறுதியாக ஒரு பாடல் காட்சியை படமாக்கவிருக்கின்றனர். இதற்கு நயன்தாரா மறுத்துவிட்டதாகவும் அதற்கு சிம்பு, டி.ஆர். ஆகிய இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ததாக கூறப்பட்டது. இதற்கு இயக்குனர் பாண்டிராஜ் அவர்களும் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ‘இது நம்ம ஆளு’ விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து சிம்புவிடம் கேட்டபோது…

“நாங்கள் நயன்தாரா மீது புகாரே அளிக்கவில்லை. ‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் 2 பாடல்கள் படமாக்கப்படவுள்ளது. எனவே நயன்தாராவிடம் தேதிகள் கேட்க யாரை அணுகவது என தெரியவில்லை. எனவே தயாரிப்பாளர் சங்கத்திடம் ” நயன்தாராவிடம் தேதிகள் வாங்கி கொடுங்கள். சம்பளத்தை உங்களிடம் கொடுக்கிறோம். நீங்கள் கொடுத்துவிடுங்கள்” என்று சொன்னோம்.

இதை கடிதமாக எழுதிக் கொடுக்க சொன்னார்கள். எழுதி கொடுத்தோம். இதான் நடந்தது. ஆனால் புகார் அளித்ததாக செய்திகள் வந்துள்ளது. நயன்தாரா தேதிகள் கொடுத்தால் படத்தில் அந்த பாட்டு இருக்கும். இல்லையென்றால் பாடலே இல்லாமல் படம் வெளியாகும்” என்றார்.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் சிம்பு தெரிவித்தாவது… “ப்ளீஸ். ‘இது நம்ம ஆளு’ பற்றிய வதந்திகளை நம்பாதீர். படம் திட்டமிட்டபடி வெளியாகும். நாங்க எல்லாம் ஒரே குடும்பம். எந்தப் பிரச்சினையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.