அன்பு தம்பி கார்த்திக்கு பிறந்தநாள் பரிசு அளித்த சூர்யா..!


அன்பு தம்பி கார்த்திக்கு பிறந்தநாள் பரிசு அளித்த சூர்யா..!

தமிழக திரையுலகை மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகை நட்சத்திர சகோதர்கள் சூர்யா மற்றும் கார்த்தி கலக்கி வருகின்றனர்.

சூர்யாவின் 24, கார்த்தியின் தோழா ஆகிய இரண்டு படங்களும் தமிழகத்தை விட ஆந்திராவில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று தன் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் இணைந்தார் கார்த்தி.

இவர் தன் பிறந்தநாளை காஷ்மோரா படப்பிடிப்பில் நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினருடன் கொண்டாடினார்.

சூர்யாவும் தன் தம்பிக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த கார்த்தி ‘தேங்க்ஸ்ப்பா… நீங்கள் வாங்கி கொடுத்த ஷுக்கள் (காலணிகள்) அருமையாக இருந்தது’ என தெரிவித்துள்ளார்.