‘ரஜினி தயக்கம்.. ரஜினி தாக்கம்…’ ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?


‘ரஜினி தயக்கம்.. ரஜினி தாக்கம்…’ ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?

இந்திய நாட்டின் இரண்டாவது உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருதுக்கு அண்மையில், ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனவே அவருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்த ரசிகர்கள் ரஜினியை சந்திக்க விரும்பியுள்ளனர்.

தற்போது ஷங்கரின் 2.0 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி, சில காரணங்களை கூறி அவர்களை சந்திக்க மறுத்துவிட்டாராம்.

ஆனால் இதற்கான உண்மையான காரணங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணம் விரைவில் நடைபெறவிருக்கிற சட்டமன்றத் தேர்தலே காரணம் என கூறப்படுகிறது.

ரஜினிக்கான பாராட்டு விழா, என்றால் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் திரண்டுவிடுவார்கள். இதில் கட்டுங்கடங்காத கூட்டம் ஏற்பட்டால் இதில் பல அரசியல் பிரச்சினைகள் எழலாம்.

மேலும் இது தேர்தல் நேரம் என்பதால் தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என ரஜினி தயங்குகிறாராம்.

இதனையறிந்த ரசிகர்கள் “தலைவர் சொன்னா அது சரியாத்தான் இருக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் ரஜினியின் தாக்கம் எதுவும் இருக்காது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.