‘த்ரிஷா எனக்கு சிஸ்டர், ராணாவுக்கு..?’ ஆர்யாவின் அலப்பறை ஆரம்பம்..!


‘த்ரிஷா எனக்கு சிஸ்டர், ராணாவுக்கு..?’ ஆர்யாவின் அலப்பறை ஆரம்பம்..!

மலையாள படமான ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீமேக் படத்திற்கு ‘பெங்களூர் நாட்கள்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் நடிகர் ஆர்யா பேசும்போது… “கடந்த 2015ஆம் ஆண்டு எனக்கு சிறப்பாக அமையவில்லை. ஆனால் இந்தாண்டு சிறப்பாக தொடங்கியுள்ளது.

இப்படத்தில் ராணா தன் காதலியை நினைத்து பீல் பண்ணும் கேரக்டரில் நடித்துள்ளார். அவருக்கு ஏற்கனவே அதுபோன்ற அனுபவங்கள் உள்ளதால் சூப்பராக நடித்துள்ளார்.

எனவே, இதனை பிடித்துக்கொண்ட மீடியா நண்பர்கள் ராணாவிடம் கேள்விகளை கேட்டனர். “நடிகை த்ரிஷாவுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ளது எந்த மாதிரியான உறவு?” என்றனர்.

அதற்கு பதிலளித்த ராணா… “இந்த மேடையில பார்வதி, ஸ்ரீதிவ்யா இருக்காங்க. அவங்கள பத்தி கேளுங்க சொல்றேன். ஆனால் த்ரிஷாவை பத்தி கேட்கிறீங்க.. அப்படின்னா அதை நீங்க ஆர்யாகிட்ட கேளுங்க” என்று கேள்வியை ஆர்யா பக்கம் திருப்பினார்.

அதற்கு பதிலளித்த ஆர்யா… “த்ரிஷா எனக்கு தங்கச்சி. ஆனால் ராணாவுக்கு என்ன உறவு என்பதை நீங்க அவர்கிட்டதான் கேட்கனும். எனக்கு அதுப்பற்றி எதுவும் தெரியாது” என்று தன் அலப்பறையால் அரங்கத்தை அதிர வைத்தார்.