ரஜினி-விஜய்யே வந்தாலும் அஜித் வரமாட்டாரு… கொதிக்கும் சங்கம்..!


ரஜினி-விஜய்யே வந்தாலும் அஜித் வரமாட்டாரு… கொதிக்கும் சங்கம்..!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் அடுத்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை விஷால் தலைமையிலான அணி செய்து வருகிறது.

இப்போட்டியை தென்னிந்தியாவைவே திரும்பி பார்க்க வேண்டும் என்ற கோணத்தில் இந்த அணி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க உள்ளனர்.

மேலும் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ்குமார் உள்ளிட்ட மற்ற மாநில சூப்பர் ஸ்டார்களையும் அழைக்கவிருக்கிறார்களாம்.

இப்படி அனைவரும் கலந்து கொண்டாலும் தமிழகத்தில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித் கலந்து கொள்வாரா? என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறதாம்.

சங்கத் தேர்தல் நடந்த போது வாக்களிக்கவும் அஜித் வரவில்லை. சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டதிற்கும் அவர் கலந்து கொள்ள வரவில்லை.

இப்படி தொடர்ச்சியாக சங்கத்தின் எந்தவொரு நிகழ்விலும் அஜித் கலந்து கொள்ளாதது நடிகர் சங்க உறுப்பினர்களை கோபப்பட வைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.