மாறி மாறி புகழ்ந்துக் கொள்ளும் தலைவர் ரஜினி – தளபதி விஜய்..!


மாறி மாறி புகழ்ந்துக் கொள்ளும் தலைவர் ரஜினி – தளபதி விஜய்..!

ஒரே நேரத்தில் கோலிவுட்டின் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்களை தயாரித்து வருபவர் கலைப்புலி தாணு.

ரஜினி நடித்த கபாலி மற்றும் விஜய் நடித்த தெறி ஆகிய இரண்டு படங்களையும் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் தெறி படத்தை பார்த்த ரஜினி ‘தெறி சூப்பர் தாணு, எப்போ வெற்றிவிழா கொண்டாட போறீங்க?’ என கேட்டாராம்.

அதுபோல் கபாலி டீசரை பார்த்த விஜய் ‘சார்… சூப்பர் ஸ்டார வச்சு கலக்கிட்டீங்களே சார்’ என தயாரிப்பாளர் தாணுவிடம் கூறினாராம்.

இதனையறிந்த தலைவர், தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.