‘ஜாதியை கட் பண்ணிட்டு கூப்பிடுங்க…’ தனுஷ் நாயகி பார்வதி பாய்ச்சல்..!


‘ஜாதியை கட் பண்ணிட்டு கூப்பிடுங்க…’ தனுஷ் நாயகி பார்வதி பாய்ச்சல்..!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி. இவர் ஸ்ரீகாந்தின் ‘பூ’, கமலின் ‘உத்தமவில்லன்’, தனுஷின் ‘மரியான்’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவரைப் போல பார்வதி என்ற பெயரிலேயே மற்றொரு நடிகையும் இருப்பதால் ரசிகர்கள் அடிக்கடி பெரும் குழப்பமடைந்து வருகின்றனர். இந்த பார்வதி அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, சமீபத்தில் திரைக்கு வந்த ‘தற்காப்பு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

எனவே, தனுஷின் ‘மரியான்’ படத்தில் நடித்த பார்வதியை அவருடன் ஜாதி பெயரை சேர்த்து பார்வதி மேனன் என்றே அழைத்து வருகிறோம்.

ஆனால், தன் பெயருக்கு பின்னால் மேனன் என்கிற ஜாதியின் அடையாளத்தை குறிப்பிடுவதை நான் விரும்பவில்லை. அப்படி அழைக்காமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள். ஆனால் என் நிஜமான பெயர் பார்வதி பெயரிலிலேயே நான் அழைக்கப்பட விரும்புகிறேன் என்றும் கூறிவருகிறார் பார்வதி.

மக்களே… நீங்களே சொல்லுங்கள்.. என்ன செய்யலாம்?