விஜய்-சூர்யா இல்லை… சித்தார்த்-சிவகார்த்திகேயன் இடையே போட்டி.?


விஜய்-சூர்யா இல்லை… சித்தார்த்-சிவகார்த்திகேயன் இடையே போட்டி.?

கடந்தாண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ‘சார்லி’. இதில் துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோபிநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மார்டின் ப்ராகாட் இயக்கிய இப்படத்தை ஃபைண்டிங் சினிமா தயாரித்து இருந்தது.

இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி எழுந்தது. இந்நிலையில், பிரபல பாலிவுட் நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளது.

இப்படத்தில் நடிக்க விஜய் அல்லது சூர்யாவிடம் பேச்சுவார்த்தை தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது சிவகார்த்திகேயன், சித்தார்த் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் இருக்கிறது.

இவர்களிடையே கடும் போட்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நாயகி வேடத்தில் பார்வதியே தமிழிலும் தொடருவார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.