அஜித், சூர்யா… யார் பர்ஸ்ட் சாய்ஸ்? குழம்பிய இயக்குனர்!


அஜித், சூர்யா… யார் பர்ஸ்ட் சாய்ஸ்? குழம்பிய இயக்குனர்!

‘அஞ்சான்’, ‘மாஸ்’ படங்களி பெரிதும் பாதிக்கப்பட்ட சூர்யா புது எனர்ஜியுடன் தன் புதிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது விக்ரம்குமார் இயக்கத்தில் சமந்தாவுடன் ’24’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஹரியின் ‘சிங்கம் 3′, லிங்குசாமி தயாரிக்கும் ‘சதுரங்க வேட்டை-2′, மற்றும் ரஞ்சித் இயக்கவிருக்கும் புதிய படம் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் சூர்யா.

இந்நிலையில் சூர்யா முதலில் எந்தப் படத்தில் நடிப்பார் என்ற சந்தேகம் சூர்யாவின் ‘சதுரங்க வேட்டை-2’யை இயக்கும் வினோத்துக்கும் எழுந்துள்ளது. இதனிடையில் இயக்குனர் வினோத் அஜித்திற்காகவும் ஒரு கதையை ரெடி செய்து இருக்கிறார். இக்கதையை ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் கூற அவரும் அஜித் கால்ஷீட் வாங்கி வாருங்கள். துவங்கி விடலாம் என க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.

ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இரு நடிகர்களின் பட வாய்ப்புககளும் ஒரே நேரத்தில் வந்தால் முதலில் யார் படத்தை என குழப்பத்தில் உள்ளாராம் வினோத்.