நான் சிங்கிள் சொன்னேனா…? அடுத்த காதலை உறுதிசெய்த சமந்தா..!


நான் சிங்கிள் சொன்னேனா…? அடுத்த காதலை உறுதிசெய்த சமந்தா..!

சமந்தா… இவர் நடித்தால் படங்கள் ஓடாது. இவர் ராசியில்லை என்று சிலர் இவர் காதுபடவே பேசினார்கள்.

அதற்கு தகுந்தாற்போல அஞ்சான், 10 எண்றதுக்குள்ள படங்களும் தோல்வி படங்களாய் அமைந்தன.

ஆனாலும் சமந்தாவின் மீது நம்பிக்கை வைத்து, விஜய் தெறி படத்திலும், சூர்யா 24 படத்திலும் வாய்ப்பு கொடுத்தனர்.

தற்போது இந்த இரு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் ஹைதராபாத்தில் பத்திரிக்கையாளர் சந்தித்தார் சமந்தா. அப்போது சமந்தாவின் காதல் குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சமந்தா… ‘நான் இப்போ சிங்கிளாக இருக்கேன் அப்படின்னு உங்ககிட்ட சொன்னேனா..?

ஆனால், காதல் பற்றி இப்போது பேச எனக்கு விருப்பம் இல்லை’ என கூறினார்.

அப்படியென்றால் தற்போது மீண்டும் காதல் வலையில் சமந்தா விழுந்துள்ளதாக தெரிகிறது.

சில வருடங்களுக்கு முன் சமந்தாவும் சித்தார்த்தும் காதலித்து, அதன் பின்னர் அவர்கள் பிரிந்ததும் தங்களுக்கு நினைவிருக்கிறதுதானே..?