ஸ்ரீதிவ்யா இல்லன்னா ஸ்ரீரம்யா; ஜெயிக்கபோவது யாரு?


ஸ்ரீதிவ்யா இல்லன்னா ஸ்ரீரம்யா; ஜெயிக்கபோவது யாரு?

தமிழில் ஒருசில நாயகிகளுக்கே குடும்பப்பாங்கான உடை அணிந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். அதில் முக்கியமானவர் ஸ்ரீதிவ்யா. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார் இவர். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஊதா கலரு ரிப்பன்’ என்ற பாடல் இவரை தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டு சேர்த்தது.

இதனைத் தொடர்ந்து இவர் நடித்த ‘ஜீவா’, ‘வெள்ளக்காரத்துரை’ போன்ற படங்களிலும் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. தற்போது ஜி.வி.பிரகாஷுடன் ‘பென்சில்’, அதர்வாவுடன் ‘ஈட்டி’, ஆர்யாவுடன் ‘அர்ஜூன், திவ்யா மற்றும் கார்த்திக் (ADMK)’, கார்த்தியுடன் ‘காஷ்மோரா’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீதிவ்யாவுக்கு போட்டியாக அவரது வீட்டில் இருந்தே இன்னொரு நடிகை நடித்துவருகிறார். இவரது அக்கா ஸ்ரீரம்யாதான் அவர். இவர் தெலுங்கில் ‘1940லோ ஒக கிராமம்’ என்ற படத்தில் நடித்தற்காக நந்தி விருது பெற்றிருக்கிறார். ‘யமுனா’ என்ற ஒரு தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார்.

இனி ஸ்ரீதிவ்யாவின் கால்ஷீட் கிடைக்கவில்லையென்றால் ஸ்ரீரம்யாவை புக் செய்து கொள்ளலாம் என காத்திருக்கிறது தமிழ் திரையுலம். இவர்கள் மோதலில் ஜெயிக்கபோவது யார்? என்று பார்த்தால்.. ஒருபோதும் எங்களுக்குள் போட்டியில்லை என்கின்றனர் இந்த பாசமலர்கள்.

அட! இப்படி சப்புன்னு ஆயிடுச்சே…