கேரளாவை குறி வைக்கும் விஜய்… அடுத்த டார்கெட் மம்மூட்டி..!


கேரளாவை குறி வைக்கும் விஜய்… அடுத்த டார்கெட் மம்மூட்டி..!

தமிழகத்தை அடுத்து கேரளாவில் விஜய் படங்களுக்கு வரவேற்பு பெருகி வருகிறது.

எனவே அண்மை காலமாக கேரளாவை குறிவைத்தே விஜய் படங்கள் தயாராகி வருகிறது.

ஜில்லா படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் நடித்தார்.

அதுபோல், தெறி படத்தில் நிறைய கேரளா காட்சிகள் இருந்தன. மேலும் இதில் மலையாளம் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் விஜய்.

இதனையடுத்து, பரதன் இயக்கவுள்ள தளபதி 60 படத்தில் நடிக்க மம்மூட்டியை அணுகியுள்ளனர்.

மம்மூட்டிக்கு கதை பிடித்திருந்தாலும், தன்னுடைய கேரக்டர் வெறுமனே சாதாரணமாக வந்து போவதை விரும்பவில்லையாம். எனவே மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.