கமலுடன் 4 முறை நடித்தவர்… ரஜினியுடன் 2 முறையும் நடிக்க மறுத்தார்..!


கமலுடன் 4 முறை நடித்தவர்… ரஜினியுடன் 2 முறையும் நடிக்க மறுத்தார்..!

ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதே பலரின் நிறைவேறாத ஆசையாக இருக்கும் பட்சத்தில் ஒரு முன்னணி நடிகர் ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பை இரண்டு முறையும் மறுத்துள்ளார்.

ஆனால் கமலுடன் நான்கு முறை நடித்துள்ளார். அவர் வேறுயாருமல்ல. மலையாள சினிமாவுலகின் முன்னணி நடிகரான சாட்சாத் ஜெயராம்தான்.

இவர் தமிழில் தெனாலி, பஞ்ச தந்திரம், உத்தமவில்லன் ஆகிய 3 படங்களில் நடித்துள்ளார்.

மேலும் மலையாளத்தில் டிகே ராஜீவ் குமார் இயக்கிய சாணக்யன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த இயக்குனர்தான் தற்போது கமல்-ஸ்ருதி நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் ரஜினியுடன் ஜெயராம் நடிக்க மறுத்த தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினியுடன் மம்மூட்டி நடித்திருந்தார். அந்த கேரக்டரில் இவரா..? என பதட்டப்பட வேண்டாம்.

அரவிந்த் சாமி கேரக்டரில் நடிக்கவிருந்தாராம் ஜெயராம். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் ரஜினியுடன் நடிக்கமுடியவில்லையாம்.

அதன்பின்னர், சுந்தர் சி இயக்கிய அருணாச்சலம் படத்தில் ரஜினியின் மூத்த தம்பியாக ராஜா நடித்திருந்தார். இதில் ஜெயராம் நடிப்பது உறுதியானது.

ஆனால் படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும் முன்னரே இத்தகவலை ஜெயராம் வெளியே சொல்லிவிட்டதால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆக இரண்டு முறையும் ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஜெயராம் தவறவிட்டுள்ளார்.