பாபநாசத்திற்கு வரிவிலக்கு மறுப்பு; உண்மை காரணம் என்ன?


பாபநாசத்திற்கு வரிவிலக்கு மறுப்பு; உண்மை காரணம் என்ன?

பெற்றோர், பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் என குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படங்கள் சமீபகாலமாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் வெளியான இரு படங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் ரசிக்க வைத்துள்ளது.

ஜோதிகாவின் ‘36 வயதினிலே’ மற்றும் கமலின் ‘பாபநாசம்’ உள்ளிட்ட படங்கள்தான் அவை. இந்த இரு படங்களும் மலையாள படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘பாபநாசம்’ படத்திற்கு சென்சார் போர்டினால் யு சான்றிதழ் கிடைத்த பிறகும் தமிழக அரசின் வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான உண்மையான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

‘பாபநாசம்’ படத்தில் போலீஸ் அதிகாரிகள் இரண்டு சிறுமிகளை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் உள்ளது என்றும், கொலை குற்றம் செய்த ஒருவர் தண்டனை பெறாமல் இருப்து போன்றும், மாணவி குளிக்கும்போது செல்போனில் படம்பிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளதால் இப்படம் வரிவிலக்கு பெறும் தகுதியை இழக்கிறது என்று காரணங்கள் கூறப்பட்டுள்ளது.

ஆனால் வரிவிலக்கு மறுப்புக்கு வேறு ஒரு காரணமும் கூறப்படுகிறது. ‘பாபநாசம்’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவிக்கு கொடுத்ததால்தான் வரிவிலக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.