இளையராஜாவை ஸ்வாமி என்று அழைப்பது ஏன்? ரஜினி உடைத்த ரகசியம்


இளையராஜாவை ஸ்வாமி என்று அழைப்பது ஏன்? ரஜினி உடைத்த ரகசியம்

’அன்னக்கிளி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று தனது 1000ஆவது படத்திற்கு இசையமைத்து வருகிறார் இளையராஜா. கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். உலக அளவில் இசைத் துறையில் இப்படி ஒரு சாதனையை எவரும் நிகழ்த்தியதில்லை. இந்நிலையில், இளையராஜாவுக்கு, பாலிவுட் திரையுலகம் பாராட்டு விழா எடுத்தது.

விழாவில் ரஜினி பேசியதாவது: “எனக்கு இளையராஜாவை 1970களில் இருந்தே தெரியும். அப்போதெல்லாம் விடிய விடிய அரட்டை அடித்துக் கொண்டு இருப்போம். அவர் மிகவும் ஜாலி டைப். அரசியல், சினிமா என நிறைய பேசுவோம். விடிய விடிய மதுவும் அருந்துவோம்.

திடீரென ஒரு நாள் அவரிடம் நிறைய மாற்றங்கள். நடை , உடை என அனைத்திலும் மாற்றங்கள். கலைவாணியே அவரிடம் குடிவந்துவிட்டாள் போல அதிரடி மாற்றம். அன்று முதல் நான் ராஜாவை “ராஜா ஸ்வாமி” என்றுதான் அழைக்கிறேன் என கூறினார்.

பாராட்டு விழாவில் அமிதாப், கமல், ஸ்ரீதேவி மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.